பருவநிலை மாற்றத்தால் விளையும் அபாயம்: நிறுவனங்கள் அறிவதில்லை

பருவநிலை மாற்றத்தால் விளையும் அபாயம்: நிறுவனங்கள் அறிவதில்லை

1 mins read

பருவநிலை மாற்றத்தால் நிதிநிலை அபாயம் உண்டாகலாம் என்ற உண்மையை சிங்கப்பூரின் பெரும்பாலான நிறுவனங் கள் அறிந்திருக்கவில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பெரிய நிறுவனங்களில் 84 விழுக்காட்டு நிறுவனங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்றும் அது உலகளாவிய விகிதமான 72 விழுக்காட்டைக் காட்டிலும் சிறப்பானது என்றும் கேபிஎம்ஜி ஆய்வு கூறுகிறது.

இதே ஆய்வில் வெளிவந்த தகவல் சிங்கப்பூரில் 100 உச்ச நிறுவனங்களில் 75% தங்கள் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் பருவநிலை மாற்றத்தை நிதிநிலை அபாயம் எனக் குறிப்பிடுவதில்லை என்றும் அதேவேளையில் உள்ளூர் நிறுவனங்களில் 17% தங்கள் நிதிநிலை அறிக்கை யில் கரிமம் குறைப்பு நடவடிக்கைகளுக்கு இலக்கை நிர்ண யித்துள்ளன என்றும் தெரிவிக்கிறது. இருந்தாலும் இது உலகளாவிய விகிதமான 50 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

உலக அளவில் பார்க்கும்போது, ஐந்து நாடுகளின் 100 பெரிய நிறுவனங்களில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் விளையக்கூடிய நிதிநிலை அபாயத்தை அறிந்துள்ளன. தைவான் (88 நிறுவனங்கள்), பிரான்ஸ் (76 நிறுவனங்கள்), தென் ஆப்பிரிக்கா (61 நிறுவனங்கள்), அமெரிக்கா (53 நிறுவனங்கள்), கனடா (52 நிறுவனங்கள்) ஆகியவை அந்த நாடுகள்.