கோழி விநியோகிப்பாளர் 13 பேர் அதிக விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டு

கோழி விநியோகிப்பாளர் 13 பேர் அதிக விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டு

1 mins read

அதிக விலைக்கு கோழியை விற்றதாக உள்ளூர் கோழி விநியோகிப்பாளர்கள் 13 பேர் மீது குற்றச் சாட்டு பாய்ந்துள்ளது. அதிலிருந்து தங்களைத் தற்காத் துக் கொள்ள அவர்களுக்கு மேலும் ஆறு வாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை ஆணையம் நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரின் கோழி சார்ந்த பொருட்களில் 90 விழுக் காட்டுக்கு மேற்பட்டவற்றை அந்த 13 பேரும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களுக்கு எதிராக புதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் கிடைத்திருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது.

இந்த 13 பேரும் 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சந்தித்து தங்கள் விலைகளை ஒருங்கி ணைத்ததாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. அவர்கள் ஒருவ ருக்கு ஒருவர் போட்டியாக இருக்கக்கூடாது என்பதிலும் இணக்கம் கண்டனர். இந்தச் செயலால் பேரங்காடிகள், உணவகங்கள், ஹோட்டல்கள், ஈரச்சந்தைகள், உணவங்காடிக் கடைகள் இறுதியாக வாடிக்கையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.