2018 முதல் புதிய கார்களுக்கு புகை வெளியீட்டு வில்லை

2018 முதல் புதிய கார்களுக்கு புகை வெளியீட்டு வில்லை

1 mins read

கார் வாங்குவோருக்கு முன்கூட் டியே தெரியப்படுத்தும்விதமாக அடுத்த ஆண்டிலிருந்து காட்சிக் கூடங்களில் விற்பனைக்கு நிறுத் தப்பட்டுள்ள கார்களில் புதிய வாகன புகை வெளியீட்டு வில் லைகள் ஒட்டப்பட்டிருக்க வேண் டும். இப்போதைய எரிபொருள் சிக்கன வில்லைக்குப் பதிலாக இந்தப் புதிய வில்லையை நிலப் போக்குவரத்து ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இணைந்து வெளியிடவுள்ளன. 2018 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து புதிய வாகன புகை வெளியீட்டுத் திட்டம் அறிமுக மாக உள்ளதையொட்டி இந்நடவ டிக்கை இடம்பெறுகிறது. கரியமிலவாயுவுடன் ஹைட் ரோ கார்பன்ஸ், கார்பன் மோ னாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு கள், மிகச் சிறிய அளவிலான தூசுகள் ஆகிய நான்கு மாசுக்க ளையும் புதிய வாகன புகை வெளியீட்டுத் திட்டம் மதிப்பிடும். அதிக தூய் மைக்கேட்டை ஏற்ப டுத்தும் மாசைப் பொறுத்து அந்த வாகனத்திற்கான தள்ளுபடிகள் அல்லது கூடுதல் கட்டணங்கள் தீர்மானிக்கப்படும்.