அதிக பயிரலங்குகளுடன் பொங்கல் விழா 2018

அதிக பயிரலங்குகளுடன் பொங்கல் விழா 2018

1 mins read
405456af-9482-4607-ae14-c068277f6b3d
-

ப. பாலசுப்பிரமணியம்

ஒளியூட்டு விழா, மேடை நிகழ்ச்சி கள், கலைப் பயிலரங்குகள், பொங் கல் பொங்குதல், அதனைப் பகிர்ந்துகொள்ளுதல் என லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பொங்கல் குதூகலம் விரைவில் தொடங்கவிருக்கிறது. அடுத்த மாதம் ஐந்தாம் தேதியி லிருந்து குடும்பங்களும் சுற்றுப்பய ணிகளும் பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தில் மூழ்க பல நிகழ்ச்சிகளை 'லிஷா' எனும் லிட் டில் இந்தியா வர்த்தகர்கள், மரபு டைமைச் சங்கம் ஏற்பாடு செய் துள்ளது. இக்கொண்டாட்டங்கள் பற்றி நேற்று இந்திய மரபுடைமை நிலை யத்தில் நடந்த செய்தியாளர் கூட் டத்தில் பேசிய லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா, கடந்த பொங்கல் கொண்டாட்டங்களின் பயிலரங்குகளுக்கு உள்ளூர் வாசி களிடமிருந்தும் சுற்றுப்பயணி களிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது என்றார். "2001லிருந்து லிஷா ஏற்பாடு செய்துவரும் பொங்கல் கொண் டாட்டம் ஆண்டுக்காண்டு விரிவ டைந்து வருகிறது. இம்முயற்சிக ளால் இந்திய கலாசாரம் குறித்த விழிப்புணர்வு உள்ளூர்வாசிகளு டன் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கும் ஏற்பட்டு உள் ளது," என்று அவர் தெரிவித்தார்.

கூடை வேய்தல், பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவை பற்றிய பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. பிரபலமான மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் உண்டு. படம்: லிஷா