சின்னஞ்சிறு எழுத்தாளர்களைச் சந்தித்த அதிபர் ஹலிமா

சின்னஞ்சிறு எழுத்தாளர்களைச் சந்தித்த அதிபர் ஹலிமா

1 mins read
c9a41c3d-7e7d-44ea-99f2-5a74e3f5b3d4
-

இரண்டு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கான பாலர் பள்ளி, பாலர் பராமரிப்பு நிலையமான 'சைல்ட் அட் ஸ்திரீட் 11'க்கு நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் வருகை அளித்தார். அங்கு அவர் ஏழு சின்னஞ்சிறு எழுத்தாளர்களைச் சந்தித்தார். அந்த ஏழு பாலர்களும் இணைந்து 'சாயாங். சைகோவ்ஸ்கி. ஒலெ!' எனும் புத்தகத்தை எழுதியுள்ளனர். குழந்தைகளைக் கவரும் பல்வேறு அம்சங்களும் கதைகளாக அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அங் மோ கியோவில் அமைந்துள்ள இந்த பாலர் நிலையம் 1999ஆம் ஆண்டு நிபுணர்கள் குழு ஒன்றால் தொடங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட, வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள் கல்வி கற்கவும் பராமரிப்பு சேவை பெறவும் இந்நிலையம் உதவி வருகிறது.

'சைல்ட் அட் ஸ்திரீட் 11' பாலர் நிலையத்திற்கு வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப்பை பாலர்கள் பாடல்கள் பாடியும் கட்டிபிடித்தும் வரவேற்றனர். பிறகு, அதிபருடன் சின்னஞ்சிறு எழுத்தாளர்கள் கலந்துரையாடினர். 48 மாணவர்கள் பயிலும் இந்த நிலையத்தில் ஆறு முழு நேர ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இந்த நிலையம் அடுத்த ஆண்டு முதல் இரண்டு மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள பாலர்களுக்கும் பராமரிப்பு சேவை வழங்க உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்