சிங்கப்பூரில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேளான்-=உணவு கால்நடை மருத்துவ ஆணையம் ஐந்து ஆண்டு கருத்தடைத் திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. கால்நடை நலன் குழுக்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகி யோருடன் இணைந்து அடுத்த ஆண்டின் பிற்பாதியில் புதிய திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மனிதாபிமானத்துடன் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்வதுடன் அவற்றை இல்லங்களுக்கு அனுப் பிவைக்க முயற்சிகள் எடுக்கப் போவதாகவும் ஆணையம் குறிப் பிட்டது. மறுவாழ்வு இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நாய்கள் அவை வாழ்வதற்கு ஏதுவான இயற்கையான இடத்தில் விடப்படும்.
தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 5 ஆண்டு கருத்தடைத் திட்டம்
1 mins read
-

