நீளமுள்ள சைக்கிள் பாதையின் முதல் 5 கிலோமீட்டர் நேற்று திறக்கப்பட்டு உள்ளதையடுத்து பிடோக் வட்டாரத்தில் சைக்கிள் ஓட்டுவது எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. புதிய அப்பர் சாங்கி சாலை, பிடோக் நார்த் அவென்யூ 3, பிடோக் நார்த் ஸ்திரீட் 2, சை சீ சாலை, சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட் ஆகிய இடங்களை ஒட்டி இந்த சைக்கிள் பாதை அமைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 8 கிலோமீட்டர் சைக்கிள் பாதை ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்துள்ளது. சைக்கிள் பாதை கட்டமைப்பு முழுமை பெற்றதும் சைக்கிள் பாதை சந்திப்புகள், சைக்கிள்கள் நிறுத்தும் இடங்கள், சைக்கிள் களைக் கொண்டு வித்தைகள் செய்யும் தளங்கள் ஆகியவை அறிமுகமாகும். அதனால் அப்பகுதி சைக்கிள் ஓட்டுவதற்கு பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நடைபாதை களுக்கும் சைக்கிள் பாதைகளுக்கும் வேறுபாடு காட்டும் வகையில் இந்தப் புதிய சைக்கிள் பாதைகளுக்குச் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. நடந்து செல்லும் பாதசாரிகளுக்குச் சைக்கிளோட்டி களால் அபாயம் ஏற்படாமல் இருக்க அது உதவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

