மின்னிலக்க நாணய நிறுவனம் திறந்துள்ள புதிய சிற்றுண்டியகம்

மின்னிலக்க நாணய நிறுவனம் திறந்துள்ள புதிய சிற்றுண்டியகம்

1 mins read

சிங்கப்பூரில் முதன்முதலாக மின்னி லக்க நாணய நிறுவனம் ஒன்று புதிய சிற்றுண்டியகத்தைத் திறந் துள்ளது. 'டுக்காட்டஸ் கஃபே' என்ற அந்தச் சிற்றுண்டியகம் சிங்கப்பூர் நாணய ஆணையத் திற்கு அருகில் அமைந்துள்ளது. காப்பி, 'சேண்ட்விச்', சுற்றுச் சூழலுக்கு உகந்த அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை விற்கும் அந்தக் கடையில், பிட்காயின், 'டுக்காட்டஸ்' மெய்நிகர் நாணயம் உள்ளிட்ட ரொக்கமில்லா முறை களில் வாடிக்கையாளர்கள் கட்ட ணம் செலுத்த ஊக்குவிக்கப்படு கின்றனர்.

தனது 'டுக்காட்டஸ்' மெய்நிகர் நாணயத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனம் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. மின்னிலக்க நாணயச் சந்தை யில் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்யும்படி இந்த வாரத் தில்தான் சிங்கப்பூர் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டுக்காட்டஸ் நிறுவனம் இந்தப் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.