வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக புதிய ஊழியர்களைச் சேர்க்கும் வங்கி

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக புதிய ஊழியர்களைச் சேர்க்கும் வங்கி

fallback

23 Dec 2017 - 12:06 pm

1 mins read

ஓசிபிசி வங்கியின் துணை நிறு வனமான 'பேங்க் ஆஃப் சிங்கப் பூர்', வெளிநாடு வாழ் இந்தியர்கள், அரபு நாடுகளின் பணக்காரர்கள் ஆகிய வாடிக்கையாளர்கள் உட னான உறவை மேம்படுத்துவதற் காக அடுத்த ஆண்டில் புதிதாக 20 நிர்வாகிகளை வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் துபாயிலும் சிலர் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பணியமர்த்தப் படுவர் என்று வங்கியின் தெற் காசியா, மத்தியக் கிழக்கு நாடு களுக்கான அனைத்துலகச் சந்தைத் தலைவர் விக்ரம் மல்ஹோத்ரா தெரிவித்தார். இந்தியர்கள் அதிக முதலீடு செய்யும் வெளிநாடுகளில் சிங்கப் பூரும் துபாயும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதாக 'கேப் ஜெமினி' கூறுகிறது.