நெல் பயிரிடும் பெற்றோரும் பிள்ளைகளும்

நெல் பயிரிடும் பெற்றோரும் பிள்ளைகளும்

1 mins read

ஆசியாவின் பிரதான உணவாக கருதப்படும் அரிசி எங்கிருந்து வருகிறது என்றும் ஒரு நெல்மணி யைத் தயாரிப்பதற்கு எந்த அள விற்கு கடின உழைப்பு தேவைப்படு கிறது என்பதை உணர்ந்துகொள்ள யீ‌ஷூனில் நெல் பயிரிடும் பயிற் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'கிரவுண்ட் அப் இனி‌ஷியேடிவ்' எனும் லாபநோக்கமற்ற நிறுவனத் தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பயிற்சி லோரோங் சென்சா ருவில் அமைந்துள்ள இயற்கை விவசாயப் பண்ணையில் அந்தப் பயிற்சி நேற்று நடைபெற்றது.

முழங்கால் அளவு நீர் பாய்ச்சப் பட்ட சேற்று நிலத்தில் பெற்றோர், அவர்களின் பிள்ளைகள் என சுமார் பத்து பேர் இறங்கி நெல் நாற்றுகளைப் பயிரிட்டனர். நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கும் இடையிலான உறவைப் ப ல ப் ப டு த் து வ த ற் கு ம் உழவர்களின் கடின உழைப்புக்கு நன்றி கூறும் விதத்தில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப் பட்டது. அதற்காக யீ‌ஷூன் பகுதியில் பசுமை உரமிட்ட நிலம் உருவாக்கப் பட்டது. நெல்மணிகள் ஜூலை மாதத்தில் தூவப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் நாற்றுகள் நடப்பட்டன. இந்த மாதத்தில் அவை அறுவடை செய்யப்பட்டன.

ஆறு வயது ஹானாவும் அவரது 43 வயது தந்தை ஹபிபுல் ரஹ்மானும் நாற்றுகளை நடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்