விமானத்தில் மூவருக்கு இடையில் வாக்குவாதம்; சிங்கப்பூருக்கு திரும்பியது

விமானத்தில் மூவருக்கு இடையில் வாக்குவாதம்; சிங்கப்பூருக்கு திரும்பியது

1 mins read

சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலி யாவிற்கு புறப்பட்ட விமானத்தில் மூன்று பயணிகளுக்கிடையில் நடந்த வாக்குவாதம் முற்றிப் போனதால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும் பியது. புறப்படத் தயாராகி விமானம் ஓடுபாதைக்குச் சென்றுகொண்டி ருந்தபோது மீண்டும் முனையத் திற்குத் திரும்பியது. வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு டார்வின் நகரை சனிக்கிழமை காலை 5.20 மணிக்கு ஜெட்ஸ்டார் விமானம் 3K161 சென்றடையவிருந்தது.

சம்பவம் காரணமாகத் தாமத மாக சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு அந்த விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது. கைபேசிகளை நிறுத்தி வைக் குமாறு விமான சிப்பந்தி அறி விப்பு செய்தபின் 47 வயது ஆஸ்திரேலிய ஆடவர் தொடர்ந்து கைபேசியைப் பயன் படுத்தி வந்ததால் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த 55 வயது பிலிப்பினோ-ஆஸ்திரே லிய ஆடவர் ஒருவர் கைபேசியை நிறுத்தி வைக்குமாறு கூறியிருந் தார். அந்த இரு ஆடவர்களுக்கும் அந்த 55 வயது ஆடவரின் மனைவியும் சேர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.