படகில் சிக்கிக்கொண்டு தவித்த 49 பயணிகள் வெளியேற்றம்

படகில் சிக்கிக்கொண்டு தவித்த 49 பயணிகள் வெளியேற்றம்

1 mins read
0e07b819-d993-477c-9da7-270b74c7eab4
-

மலேசியாவிலிருந்து சிங்கப்பூரின் சாங்கி பயணிகள் படகு முனையத் திற்கு வந்த படகு நிறுத்த முடியா மல் இருந்ததால் அதிலிருந்த 49 பயணிகள் சிக்கி தவித்தனர். படகுத்துறை மேம்பாட்டுப் பணி கள் நடந்து வரும் நிலையில் கட்டு மானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் இழுவைப்படகு படகுத்துறையை மறைத்தபடி நின்றதால் படகை நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில் சிக்கிய பய ணிகளைச் சிங்கப்பூர் போலிஸ் படையின் அதிகாரிகள் பாதுகாப் பாக வெளியேற்றினர். ஜோகூர் துறைமுக ஆணையம் இயக்கிவரும் சாங்கி பயணிகள் படகு முனையத்தில் படகுத்துறை மேம்பாட்டுப் பணிகள் நடந்து வரு வதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) நேற்று முன்தினம் தெரிவித்துள் ளது.

படகின் இயல்பான வழி மூலம் வெளியேற முடியாத பயணிகளை போலிஸ் அதிகாரிகள் படகின் மேற்கூரையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். படம்: வான் பாவ் வாசகர்