கெப்பல் நிறுவனப் பிரிவுக்கு $570 மில்லியன் அபராதம்

கெப்பல் நிறுவனப் பிரிவுக்கு $570 மில்லியன் அபராதம்

1 mins read

கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் கரையைத் தாண்டிய மற்றும் கடல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஒன்றின் முன்னாள் பிரேசிலிய முகவர் ஒருவர் செய்த பணமோசடி தொடர்பில், அமெரிக்கா, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் குற் றவியல் அமலாக்க அமைப்புகளு டன் உலகளாவிய தீர்மானம் ஒன் றைச் செய்து கொண்டுள்ளது. உலகில் மூன்று நாடுகளின் சட்ட அதிகார வரம்புகளுக்கு உட் பட்டுள்ள இந்தத் தீர்மானம் இதுவரை எந்தவொரு சிங்கப்பூர் நிறுவனத்துக்கும் ஏற்படாத ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின்படி, 'கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின்' (Keppel O&M) நிறுவனம் அமெ ரிக்கா, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் குற்றவியல் அமலாக்க அமைப்புகளிடம் S$570 மில்லியன் (US$422 million) அபராதம் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள அந்நிறுவனக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அந்த பணமோசடியைச் செய்த வர் அதன் முன்னாள் முகவரான திரு ஸுவி ஸ்கோர்நிக்கி. அவர் பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட 'கெப்பல் ஓ அண்ட் எம்' நிறுவனத் திட்டங்களை அதன் முன்னாள் மேலதிகாரிகளின் ஒப்புதலின்றி செய்துள்ளார்.