கேலாங் லோரோங் 20ல் வழிப்பறி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்று நம்பப்படும் 32 வயது ஆடவரை போலிஸ் கைதுசெய்து இருக்கிறது. கேலாங் லோரோங் 20ல் இந்த மாதம் 22ஆம் தேதி இரவு சுமார் 11.45 மணிக்கு ஆடவர் ஒருவர் தன்னுடைய கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக ஒரு மாது புகார் தெரிவித்தார். அதனையடுத்து பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர புலன்விசாரணை நடத்தினர். போலிஸ் புகைப்பட சாதனங்களின் உதவியுடன் அவர்கள் அந்தச் சந்தேகநபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். பிறகு அவர் நேற்று கேலாங் ரோட்டில் கைதுசெய்யப்பட்டதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அந்த ஆடவர் மீது நாளை குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி என்று தீர்ப்பானால் ஓராண்டுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதோடு, அவருக்குப் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
வழிப்பறி சந்தேகநபர் கைது
1 mins read

