தெரிந்தவர்கள் தொடர்புகொள்க

தெரிந்தவர்கள் தொடர்புகொள்க

1 mins read

போய் ஹெங் லீ என்ற 16 வயது பையனைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்து உதவும்படி போலிஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. அந்தப் பையன் கடைசியாக இந்த மாதம் 18ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணிக்கு கார்ப்பரேஷன் டிரைவில் இருக்கும் 301=ஏ புளோக்கில் காணப்பட்டான். வெள்ளைநிற மேல்சட்டையும் பழுப்புநிறக் கால்சட்டையும் அணிந்திருந்தான். தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness. என்ற முகவரி மூலம் தகவல் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் பரமரகசியமாக வைக்கப்படும் என்று போலிஸ் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.