உரிமமின்றி லாரி ஓட்டி அதை விபத்துக்கு உள்ளாக்கிய 16 வயது இளையர் கைது

உரிமமின்றி லாரி ஓட்டி அதை விபத்துக்கு உள்ளாக்கிய 16 வயது இளையர் கைது

1 mins read
ec89e059-1d87-4997-b5fc-0d1530dd7de1
-

கிறிஸ்மஸ் தினத்தன்று ஜாலான் காயூவில், 16 வயது இளையர் ஒருவர் லாரியை ஓட்டி, அங்கிருந்த எரிவாயு கட்டுப்பாட்டுப் பெட்டியை மோதி அதைச் சேதப்படுத்தினார். அதனால் அந்தப் பெட்டியிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கியது. அந்த லாரியைத் திருடிய அந்த இளையர், அன்று மாலை 6.20 மணிக்கு லாரியின் கட்டுப் பாட்டை இழந்ததால், ஜாலான் காயூ, புளோக் 447Aக்கு அருகில் உள்ள எரிவாயு கட்டுப்பாட்டுப் பெட்டி மீது மோதினார். அந்த விபத்தில் அவர் ஒருவரே காயமுற்றார் என்று போலிஸ், ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று தெரிவித்தது. மாலை உச்சநேரத்தின்போது, அருகிலுள்ள காப்பிக்கடையில் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்த சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந் தது என்று லியன்ஹ வான்பாவ் மாலை நேர சீன நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. தான் அந்தக் காப்பிக்கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பலத்த சத்தம் கேட்டதாக திரு ஹுவாங் என்பவர் வான் பாவ் நாளிதழிடம் தெரிவித்தார். "அந்த லாரி அங்குள்ள எரி வாயுப் பெட்டியை மோதியது. பின் னர் சாலையோர மேடையில் ஏறி, புல் தரையில் நின்றது.

உரிமையாளருக்குத் தெரியாமல் அவரது லாரியைத் திருடிய 16 வயது இளையர் அதனை ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்து எரியாவு கட்டுப்பாட்டுப் பெட்டி மீது மோதினார். படம்: வான் பாவ்