பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவும் ஆலய கல்வி விருதுகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவும் ஆலய கல்வி விருதுகள்

1 mins read
d6eeb39f-c45a-40f0-99dc-f04e0bbcc061
-

ப. பாலசுப்பிரமணியம்

தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியிலிருந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி வரையில் குமாரி சுபா‌ஷினி மோக னதாஸ் மேற்கொண்ட கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் வழங்கிய கல்வி உதவி நிதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெப்போ சாலையில் அமைந்துள்ள அவ்வாலயத்தின் கல்வி உபகாரச் சம்பளம், கல்வி உதவி நிதி நிகழ்ச் சியில் பயன்பெற்ற 125 மாணவர் களில் இந்த 22 வயது இளையரும் ஒருவர். "தற்போது குடும்பத்தில் என் தந்தை மட்டுமே வேலை செய்வதால் முடிந்தவரை கிடைக்கும் கல்வி உதவி நிதியை மாதக் கைச் செல வுக்கு பயன்படுத்துவேன். சமூகத் திற்குப் பங்களிக்கும் வகையில் ஆலயத்திற்குத் தொண்டூழியம் புரியவும் விரும்புகிறேன்," என்றார் அடுத்தாண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியர் பணி யில் சேர எண்ணம் கொண்டுள்ள சுபா‌ஷினி.

கல்வி விருது பெற்ற 125 மாணவர்களில் 22 வயது குமாரி சுபா‌ஷினி மோகனதாசும் (இடது), 13 வயது ச. ஜெய்கணே‌ஷும் அடங்குவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்