உலகளாவிய பொருளியலை வலு வடைய செய்யும் முயற்சிகள் தொ ட ர் ந் து கொ ண் டி ரு ப் ப த ன் விளைவாக, சிங்கப்பூரின் ஏற்று மதிகளுக்கும் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது சிங்கப்பூரின் உற்பத்தியா ளர்களுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஆண்டுக்காண்டு அடிப்படை யில் கடந்த மாதத்தின் உற்பத்தி 5.3 விழுக்காடு விரிவடைந்துள் ளது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்தது. பொருளியல் வல்லுநர்கள் உற் பத்தி அதிகரிப்பு நவம்பரில் 8.1 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைத்திருந்தனர். உயிர் மருத்துவ உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவே ஒட்டு மொத்த உற்பத்தி விகிதத்தின் சரிவுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நவம்பரில் சிங்கப்பூரின் உற்பத்தி 5.3% அதிகரிப்பு
1 mins read

