எம்ஆர்டி ரயிலில் தூங்கிய பெண்ணிடம் மானபங்கம்: ஆடவருக்குச் சிறை

எம்ஆர்டி ரயிலில் தூங்கிய பெண்ணிடம் மானபங்கம்: ஆடவருக்குச் சிறை

1 mins read

எம்ஆர்டி ரயிலில் தனக்குப் பக்கத்தில் தூங்கிக்கொண்டி ருந்த 23 வயதுப் பெண்ணை மானபங்கம் செய்த விரைவு உணவக ஊழியர் ஒருவருக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சுன் லியன்ஜி எனும் அந்த 22 வயது சீன நாட்டு ஆடவர், முதலில் அந்தப் பெண்ணின் தொடையைத் தொட்ட பிறகு அவர் ஏதும் செய்யாமல் இருந்ததால், தொடர்ந்து அவரைத் தொட்டுக் கொண்டிருந்ததாகக் கூறினார். கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி காலை 9 மணிக்கு வட்டரயில் பாதையில் உள்ள ஸ்டேடியம் நிலையத்தில் தான் ஏறியதாகவும் அந்தப் பெண் அழகாக இருந்ததால் தவறிழைக்க எண்ணம் தோன்றியதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.