74 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை

74 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை

1 mins read

கால்வாய்களில் சேற்றுநீரைக் கலக்கவிட்டதற்காகவும் அதைத் தடுக்க போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காததற் காகவும் இவ்வாண்டு 74 கட்டு மான நிறுவனங்கள் மீது நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரி வித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மூன்றாண்டுகளில் சராசரி யாக நூறு அமலாக்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. அதை விட இவ்வாண்டு குறைவான எண்ணிக்கையிலேயே நடவடிக் கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று கழகம் கூறியது. பெரும்பாலும், நிலம் அகழப் படும் இடங்களிலேயே இது நிகழ் கிறது. தோண்டப்பட்ட மண் மீது மழைநீர் சேர்ந்து, சேறாகி, அது கால்வாய் வழியாக ஓடி, பின் நீர் நிலைகளில் கலந்துவிடுகிறது. தற்போது சுமார் ஆயிரம் கட்டுமானத் தளங்களில் நிலம் அகழும் பணி நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சேற்றுநீரைத் திரும்பவும் கால் வாய்களில் கலக்கவிட்டதற்காக ஹுவாடியோங் கான்ட்ராக்டர், சேம்வோ ஆகிய இரு நிறுவனங் களும் தண்டிக்கப்பட்டுள்ளன.