ஜோகூரின் தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த படுகொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய பிஎம்டபிள்யூ காரை போலிசார் மீட்டுள்ளனர். பொந்தியான் பகுதியில் உள்ள ஆயர் பாலோய் செம்பனை எண் ணெய் தோட்டத்தில் அந்த கார் சந்தேக நபர்களால் கைவிடப்பட்டுக் கிடந்ததாக ஜோகூர் தலைமை போலிஸ் அதிகாரி முகம்மது கலீல் காதர் முகம்மது நேற்று செய்தி யாளர்களிடம் கூறினார். அந்த வாகனத்தை நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பொதுமக்கள் கண்டு போலிசிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். 44 வயது ஆடவரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட இரு கருவி களுள் ஒன்றாக அந்தக் கார் கருதப்படுவதாகவும் திரு கலீல் சொன்னார். "விசாரணைக்கு உதவும் வகை யில் மேலும் மூன்று முக்கிய சந் தேக நபர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம்," என்றார் அவர்.
சந்தேக நபர்கள் விட்டுச் சென்ற கார். காரைக் கண்ட பொதுமக்கள் அது பற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்ததாக ஜோகூர் தலைமை போலிஸ் அதிகாரி கூறினார். படம்: த ஸ்டார்

