தவறிழைக்கும் வாகனமோட்டிகளைப் பிடிக்க தொழில்நுட்பம்

தவறிழைக்கும் வாகனமோட்டிகளைப் பிடிக்க தொழில்நுட்பம்

1 mins read
36c71041-c884-40e3-b9ce-b7584e93a672
-

கார் நிறுத்தக் கட்டணங்களைத் தவிர்க்கும் நோக்கில் முன்னே செல்லும் வாகனத்துக்கு நெருக்க மாகப் பின்தொடர்ந்து செல்லும் வாகனங்களைப் பிடிக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தொழில்நுட் பத்தைப் பயன்படுத்த உள்ளது. கார்நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்தாமல் கார்நிறுத்த வெளி வாயிலை தந்திரமாகக் கடந்து செல்லும் வாகனமோட்டிகளைப் படம் பிடிக்க கேமராவையும் உணர் கருவிகளையும் கழகம் பயன் படுத்தும். தவறிழைக்கும் வாகனமோட்டி களைப் பிடிக்கும் தானியக்க முறை டிடிஎஸ் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கார் நிறுத்தப் பேட்டை களில் அந்தப் புதிய முறை அறி முகம் காணும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. தற்போது, அவ்வாறு தவறிழைக் கும் வாகனமோட்டிகளைக் கண் டறிய ஆள்பலம் பயன்படுத்தப்படு கிறது. கார் நிறுத்தப் பேட்டை களிலுள்ள ஊழியர்கள் கண் காணிப்புக் கருவி மூலம் பார்த்து வாகனங்களின் கட்டணச் சான் றையும் கருவியில் பதிவான படத் தையும் ஒப்பிட்டுச் சோதனை நடத் தும் முறை நடப்பில் உள்ளது. புதிய முறைப்படி, மின்னியல் கார்நிறுத்த முறை அமலில் இருக் கும் கார்நிறுத்தப் பேட்டையின் வெளியேறும் வழியை நெருங்கும் வாகனங்களின் இடைவெளி தூரம் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் உணர்கருவிகளின் கட்டமைப்பால் கணக்கிடப்படும்.

கார்நிறுத்தப் பேட்டைகளில் சோதித்துப் பார்க்கப்பட்ட புதிய தொழில்நுட்பம். படம்: வீவக