தமது சொந்த பிள்ளையைத் தத்தெடுக்க ஒரே பாலின உறவில் ஈடுபட்டு வரும் சிங்கப்பூர் ஆடவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மருத்துவரான அந்த ஆடவர் இன்னோர் ஆடவருடன் கடந்த 13 ஆண்டுகளாக ஒரே பாலின உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். தமக்கு ஓர் ஆண் பிள்ளை வேண்டுமெனக் கருதி அமெரிக்கா வுக்குச் சென்று தமது குழந்தை யைச் சுமக்க ஒரு வாடகைத் தாய்க்கு அவர் ஏற்பாடு செய்தார். இதற்கு அவர் 200,000 அமெரிக்க டாலர் செலவு செய்தார். அமெரிக்காவுக்குச் செல்வ தற்கு முன்பு ஒரே பாலினத் தம்பதியர் பிள்ளைகளைத் தத்தெடுப்பது குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் அவர் விசாரித்திருந்தார். பிள்ளைகளைத் தத்தெடுக்க ஒரே பாலினத் தம்பதியருக்கு அனுமதி வழங்குவது சந்தேகமே என்று அமைச்சு அவரிடம் கூறியிருந்தது. அப்படி இருந்தும் அந்த ஆடவர் அமெரிக்காவுக்குச் சென்று வாடகைத் தாய்க்கு ஏற்பாடு செய்தார். இப்போது அந்த ஆண் பிள்ளைக்கு 4 வயதாகிறது. அப்பிள்ளையை அந்த ஆடவர் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து உள்ளார்.
சொந்த பிள்ளையை தத்தெடுக்க அனுமதி மறுப்பு
1 mins read

