ஊழியர்களுக்கு இழப்பீடு கொடுக்காத முதலாளிகள் இருவருக்கு $41,000 அபராதம்

ஊழியர்களுக்கு இழப்பீடு கொடுக்காத முதலாளிகள் இருவருக்கு $41,000 அபராதம்

1 mins read

ஊழியர்களுக்காக வேலையிடக் காயங்களுக்கான காப்புறுதி வாங் கத் தவறியதோடு, காயமடைந்த ஊழியர்களுக்கு இழப்பீடு தரு மாறு உத்தரவிடப்பட்டபோது அதையும் கொடுக்காத இரு முத லாளிகளுக்குச் சென்ற மாதம் நீதிமன்றத்தில் $41,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

புதுப்பிப்பு நிறுவனமான 'வேலி யன்சி என்டர்பிரைஸ்', இழப்பீடு கொடுக்கத் தவறிய ஒரு குற்றச் சாட்டையும் காப்புறுதி எடுக்கத் தவறிய ஐந்து குற்றச்சாட்டுகளை யும் ஒப்புக்கொண்ட பிறகு, நவம் பர் 7ஆம் தேதி $20,000 அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. 'ரிட்ஜ்வே மரின் & கன்ஸ்ட் ரக்ஷன்' நிறுவனத்தின் உரிமை யாளரான சூரியகுமார் ரிட்ஜ்வே ராமையாவும் நவம்பர் 16ஆம் தேதி அதே குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டவுடன் $21,000 அபராதம் விதிக்கப்பட்டது.