'மசராட்டி' கார் ஒட்டுநர் மீது மேலும் 15 குற்றச்சாட்டுகள்

'மசராட்டி' கார் ஒட்டுநர் மீது மேலும் 15 குற்றச்சாட்டுகள்

1 mins read

பிடோக் ரெசர்வோர் ரோட்டில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரியான ஸ்டாஃப் சார்ஜண்ட் கைருலன்வார் கஹாரை மோதிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிய 'மசராட்டி' கார் ஓட்டுநர் மீது நேற்று மேலும் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து 34 வயது லீ செங் யான் (படம்) மொத்தம் 23 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் பெரும் பாலானவை போக்குவரத்துக் குற்றங்கள்.

இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களுக்கு வாகனமோட்ட லீக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. நவம்பர் 17ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு சாலையில் அதிகாரி கைருலன்வார் வாகனங்களைச் சோதனையிட்டுக்கொண்டிருந்தபோது, அவரிடமிருந்து தப்பித்துச் செல்லும் முயற்சியில் அதிகாரியை மோதித் தள்ளினார். காரின் கதவில் சிக்கிக்கொண்ட அதிகாரி 100 மீட்டருக்கு அப்பால் சாலையில் விழுந்தார். அடுத்த மாதம் 25ஆம் தேதி லீ மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.