துப்புரவு செய்யும் லாரியுடன் கார் மோதல்: காரோட்டிக்கு காயம்

துப்புரவு செய்யும் லாரியுடன் கார் மோதல்: காரோட்டிக்கு காயம்

1 mins read
d6026ce8-df2a-4ddd-b3b5-d5ffecce83a6
-

ஃபேபர் ரோட்டை நோக்கிச் செல்லும் லார்னி ரோட்டில் உள்ள ஃபேபர் மேம்பாலச் சாலையில் நேற்று அதிகாலை 4.02 மணிக்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இயந்திர துப்புரவு லாரியுடன் கார் ஒன்று மோதியதில் அதன் 46 வயது ஓட்டுநர் காயமுற்றார். சுயநினைவுடன் அந்த ஆடவர் டான் டோக் செங் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று போலிஸ் பேச்சாளர் கூறினார். அந்த ஓட்டுநருக்கு தோள் வலியும் ஏற்பட்டதாகவும் காருக்குள் எந்த பயணியும் இல்லை என் றும் அறியப்படுகிறது. பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த லாரியின் பின்புறத் தில் அந்த கார் மோதியதில் அதன் முன்பகுதியும் முன் கண்ணாடியும் மோசமாக சேதமுற்றதாக இணையத்தில் பரவிய படங்களிலிருந்து தெரிய வந்தது. லாரிக்கு எவ்வித சேதமும் இல்லை.