எஸ்எம்ஆர்டி குத்தகை: மோசடிக் குற்றங்களை எதிர்நோக்கும் நால்வர்

1 mins read

'எஸ்எம்ஆர்டி டிரெயின்ஸ்' நிறு வனத்தின் முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மூவர் மோசடிக் குற் றங்கள் தொடர்பில் நேற்று நீதி மன்றத்துக்கு வந்திருந்தனர். $9.8 மில்லியன் மதிப்புள்ள 28 குத்தகைகள் வழங்கப்பட்ட விவ காரத்தில் இரு நிறுவனங்களுடன் அவர்கள் ரகசிய தொடர்பு வைத் திருந்ததாகக் குற்றம் சாட்டப்படு கிறது. மோசடிக் குற்றங்கள் கடந்த 2007ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடை யில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. எஸ்எம்ஆர்டி முன்னாள் ரயில் தட மேலாளர் ஸ`ல்கிஃப்லி மார்வி, 52, முன்னாள் உதவிப் பொறியாளர் ஸக்கரியா முகமது ஷரிஃப், 59, முன்னாள் மேலாளர் ஜமாலுதீன் ஜுமாரி, 61, ஆகி யோரே குற்றச்சாட்டை எதிர் நோக்குபவர்கள். இவர்கள் தவிர எனோவே ஷன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் இயக்குநர் அக்பர் அலி டம்பிஷாஹிப், 60, என்பவர் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன.

எனோவேஷன் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் மீது அக்கறை கொண்ட மூவரும் எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற உண்மையை மறைத்து நேர்மை யற்ற வகையில் நடந்துகொண்ட தாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டு உள்ளது.