சிங்கப்பூர் செய்தியாளருடன் சேர்த்து மூவரை விடுவித்தது மியன்மார்

சிங்கப்பூர் செய்தியாளருடன் சேர்த்து மூவரை விடுவித்தது மியன்மார்

1 mins read

ஆளில்லா வானூர்தியை (டிரோன்) கொண்டு காணொளி பதிவு செய்ததால் விமான சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் வைக்கப்பட்ட சிங்கப்பூரரான கேமரா பதிவாளர் லவ் ஹொன் மெங், மலேசியாவைச் சேர்ந்த செய்தியாளர் மொக் சொய் லின், உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் ஆங் நயிங் சொ, ஓட்டுநர் லா டின் ஆகியோர் தலைநகர் நேப்பிடா அருகேயுள்ள யமெதின் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மியன்மாரின் நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகே டிரோனை கொண்டு காணொளி பதிவு செய்ய முனைந்தபோது அவர்கள் போலிசாரால் பிடிக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்பை அவர்கள் மீறவில்லை என்பதாலும் சிங்கப்பூர், மலேசியாவுடனான நட்புறவை மேம்படுத்தவும் அவர்களை குடிநுழைவு மற்றும் போலிஸ் படை விடுவித்துள்ளதாகக் கூறப்பட்டது.