இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்திருப்பதன் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண் டில் மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 6.3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு காலாண்டுடன் ஒப் பிடுகையில் யூனிட் ஒன்றின் விலை சராசரியாக 1.26 காசுகள் அதிகரிக்கும். இந்தக் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். மின் உற்பத்திக்குப் பயன்படுத் தப்படும் இயற்கை எரிவாயுவின் விலை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரித் திருப்பதாக எஸ்பி குழுமம் நேற்று தெரிவித்தது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வீடுகளுக்கு விநி யோகிக்கப்படும் மின்சாரக் கட் டணம் யூனிட் ஒன்றுக்கு 21.56 காசுகளாக இருக்கும். இவ்வாண் டின் கடைசிக் காலாண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 20.30 காசுகளாக இருந்தது.
மின்சாரக் கட்டணம் சராசரியாக 6.3% உயர்வு
1 mins read

