ஹவ்காங்கில் உள்ள கார் நிறுத் தும் இடத்தில் இம்மாதத் தொடக் கத்தில் மருமகனுடன் சண்டை போட்ட 56 வயது ஆடவரைக் கைது செய்திருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கெல்வின் ஹோ என்பவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அந்தச் சண்டையின் ஒரு பகுதியைக் காட்டும் காணொளி 'ஃபேஸ்புக்'கில் பர வியது. அந்தக் காணொளியை 60,000க்கும் அதிகமானோர் பார்த்தனர். சுமார் 1,200 பேர் அதைப் பகிர்ந்து கொண்டனர். ஹவ்காங் அவென்யூ 8ல் இருக்கும் புளோக் 644க்கு அருகில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இம்மாதம் 9ஆம் தேதி மாலை 6.38 மணிக்கு சண்டை நிகழ்ந்தது.
காணொளியில் பெண் ஒருவர் சிவப்பு நிற பேஸ்பால் மட்டையை அசைப்பது பதிவாகி உள்ளது. கைதாகியுள்ள 56 வயது ஆடவரின் இணை அவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. சண்டைக்கான காரணம் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட ஆடவர் தமது இணையுடன் காரில் அமர்ந்திருந்தபோது அவரது மரு மகனைப் பார்த்ததாகச் சொல்லப் படுகிறது. பின்னர், காரில் இருந்து இறங்கிய ஆடவர் அவ ரது மருமகனோடு சண்டை இட்டதாகத் தெரிகிறது.
சண்டையின்போது மருமகனை மட்டை யால் தாக்கிய அந்த ஆடவர், "உன்னைக் கூறுபோட விரும்பு கிறேன்," என்று கேன்டனிஸ் மொழியில் கத்தினார். இந்தச் சம்பவத்தைப் பலர் காணொளிகளாகப் பதிவுசெய்த னர். அந்த வழியாகச் சென்ற ஒருவர் போலிசாருக்குத் தகவல் அளித்ததன் பேரில், பயங்கரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டு மென்றே காயம் ஏற்படுத்திய வழக்கின் தொடர்பில் 56 வயது ஆடவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.
ஹவ்காங்கில் மாமனார், மருமகன் இடையே நடந்த சண்டை தொடர்பான காணொளியின் ஒரு காட்சி. படம்: கெல்வின் ஹோவின் ஃபேஸ்புக் பக்கம்

