தலைகீழாகக் கவிழ்ந்த கார்: மூவர் காயம்

தலைகீழாகக் கவிழ்ந்த கார்: மூவர் காயம்

1 mins read
cc5f534c-fd70-4f19-9654-7a5fcf11b051
-

தானா மேரா கோஸ்ட் ரோடு, தானா மேரா ஃபெர்ரி ரோடு சந்திப்பில் நேற்றுக் காலை 7.45 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்து உள்ளனர் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித் தது. இரு கார்கள், ஒரு லாரி ஆகியவை சம்பந்தப் பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மூன்று ஆடவர் கள் 23க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் போலிசார் கூறினர். 'SG No.1 in All Sharing' எனும் போக்கு வரத்து தொடர்பான செய்திகளின் ஒளிவழி வெளி யிட்ட புகைப்படங்களில் ஒரு நீல நிற கார் சாலைச் சந்திப்பில் தலைகுப்புற கவிழ்ந்து கிடப்பதையும் அதன் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து இருப் பதையும் காண முடிந்தது. காயமுற்றவர்கள் நீல நிற காரில் பயணம் செய் தவர்கள் என்று அறியப்படுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி மற்றும் மற்றொரு காரின் ஓட்டுநர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

லாரியுடன் மோதிய வேகத்தில் இந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறது. படம்: TELEGRAM