புத்தாண்டு குதூகலத்தைப் பரப்பிய இளைய தொண்டூழியர்கள்

புத்தாண்டு குதூகலத்தைப் பரப்பிய இளைய தொண்டூழியர்கள்

1 mins read
7ff4ef52-7b51-48ba-87b0-3b28dd0d5ea3
-

ரயில் சேவை தாமதங்கள், தடை கள் ஆகியவற்றை பலமுறை சந் தித்த எஸ்எம்ஆர்டி ரயில் நிலைய ஊழியர்கள் அந்தச் சமயங்களில் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்தார்கள் என்பதை யாரும் மறக்கக்கூடாது என்பதை வலியு றுத்த இளைய தொண்டூழியர்கள் சிலர் அவர்களுக்கு ஆண்டிறுதி அன்பளிப்புகளை நேற்று வழங்கி உற்சாகப்படுத்தினர். 'சூ சூ' திட்டம் என்று அழைக் கப்படும் இதை தான் ஏற்று செய்த தாகக் கூறினார் சிங்கப்பூர் நிர்வா கப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 21 வயது மாணவர் திரு லீ சி என். டோபி காட், சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையங்களில் திரு லீ தனது நண்பர்களுடன் எஸ்எம் ஆர்டி ஊழியர்களுக்கு அன்பளிப் புப் பொட்டலங்களை வழங்கினார். உற்சாகப்படுத்தும் வாசகங் களைக்கொண்ட வாழ்த்து அட் டைகள், 'டைகர் பாம்' வலி நிவா ரணக் களிம்பு, ஈர 'டி‌ஷு' தாட்கள் போன்றவை அந்த அன்பளிப்புப் பொட்டலங்களில் இருந்தன.

சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்தில் லீ சி என் (வலமிருந்து 3வது) அவரது தொண்டூழிய நண்பர்கள் ஆகியோர் எஸ்எம்ஆர்டி ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்