2018ல் கட்டணத்தை உயர்த்தும் இரு ஆரம்பகால பள்ளி நிறுவனங்கள்

2018ல் கட்டணத்தை உயர்த்தும் இரு ஆரம்பகால பள்ளி நிறுவனங்கள்

1 mins read

சிங்கப்பூரிலுள்ள இரு பெரிய ஆரம்பகால பள்ளி நிறுவனங் கள் தங்கள் கட்டணங்களை இவ்வாண்டு உயர்த்துகின்றன. 'பிசிஎஃப்' நிறுவனம் தனது குழந்தைப் பராமரிப்பு மற்றும் சிசு பராமரிப்புக் கட்டணம் ஆகியவற்றை ஐந்து விழுக்கா டும் பாலர் பள்ளிக் கட்டணத்தை $20யும் உயர்த்தவுள்ளது. 'மை ஃபெஸ்ட் ஸ்கூல்' நிறுவனம் தனது சிசு பராமரிப் புக் கட்டணத்தை $5லிருந்து $20 வரையும் குழந்தைப் பராமரிப்புக் கட்டணத்தை $6லிருந்து $33 வரையும் உயர்த் துகிறது. தீவு முழுவதும் 130 நிலையங்களைக் கொண்டுள் ளது 'மை ஃபெஸ்ட் ஸ்கூல்' நிறுவனம்.

இரு பள்ளிகளின் கட்டண உயர்வும் இந்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது. "ஆரம்பகால பள்ளி நிறுவனங்கள் அவ்வப்போது கட்டண உயர்வை அமல்படுத்தும். நடை முறைச் செலவுகளைக் கட்டிக்காக்கவும் தரமான கல்விப் பாடங்களை வழங்கக் கூடிய திறமையான ஆசிரியர்களை ஈர்க்கவும் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் கட் டண உயர்வு அவசியமாகிறது," என்று ஆரம்பகால பள்ளித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.