மறுவிற்பனை வீடுகளை வாங்கும் விற்கும் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வீடமைப்பு வளர்ச் சிக் கழகத்தின் (வீவக) மறுவிற் பனை இணையவாசல் இன்று முதல் செயல்படவிருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளில் வீவக-வின் மறுவிற்பனை சந்தை யில் செய்யப்பட்டிருக்கும் ஆகப்பெரிய மாற்றம் இதுவென கூறப் படுகிறது. மறுவிற்பனை வீடுகளை வாங் குவோரும் விற்போரும் தங்கள் விண்ணப்பங்களை இணைய வாசல் வழி சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த இணையவாசலை www. hdb.gov.sg எனும் கழகத்தின் இணையத்தளத்தில் தங்கள்'சிங்பாஸ்' மறைச்சொல்லைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள லாம். இந்த மாற்றத்தை மக்கள் எளி தாகப் புரிந்துகொள்ள வாடிக்கை யாளர் உதவி முகப்பையும் 'எச்டிபி ஹப்'பில் கழகம் அமைக் கும். மறுவிற்பனை வீட்டு விண் ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவு டன் அதற்கென வாடிக்கையாளர் சேவை நிர்வாகி ஒருவர் நியமிக் கப்படுவார். இந்த மறுவிற்பனை பரிவர்த்தனை முறையை நன்கு புரிந்துகொள்ள பொதுமக்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்படும்.

