தாய்லாந்தில் டிசம்பர் 31ஆம் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றதாக நம்பப்படும் இரண்டு சிங்கப் பூரர்கள் விபத்துக்குள்ளாகி மாண்டனர். தாய்லாந்தின் தெற்குப் பகுதி யில் உள்ள பத்தாலுங் மாநிலத்தில் நிகழ்ந்த அந்த விபத்தில், இங் யோங் சிங் என்ற 27 வயது ஆட வரான சிங்கப்பூரர் இறந்துவிட்டார் என்று அந்த வட்டாரச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆடவருடன் விபத்தில் சிக்கிய குமாரி வனலின் பிங், 22, மருத்துவமனையில் தீவிர கண் காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு பிறகு நேற்று இறந்துவிட்டார். குமாரி பிங், சிங்கப்பூர் பல துறை தொழிற்கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.
இச்சம்ப வத்தில் பேங்காக்கில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகம் குடும்பத்தின ருக்கு உதவி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. இந்த விபத்தைக் காட்டும் படங்கள் இணையத்தில் பதிவேற் றப்பட்டிருந்தன. சிங்கப்பூரில் பதி யப்பட்ட ஒரு மோட்டார்சைக்கிள் மோசமாக நொறுங்கிய நிலையில் விழுந்து கிடந்தது படத்தில் தெரிந்தது. சாலை ஓரம் கிடந்த ஒருவருக்கு மருத்துவர்கள் உதவி யதையும் படங்கள் காட்டின. அவ சர வாகனங்களும் பொதுமக்களில் பலரும் படங்களில் இருந்தனர்.
தாய்லாந்தில் புத்தாண்டுக்கு முதல் நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி நேற்று உயிர் இழந்த குமாரி பிங். இந்த விபத்தில் சிங்கப்பூரரான ஓர் ஆடவரும் பலியானார்.
படம்: ஃபேஸ்புக்/ வனலின் மிச்சல் பிங், கிட்சடா தமாராச்

