லாரி ஒன்று விபத்துக்குள்ளா னதைத் தொடர்ந்து செங்காங்கை தெம்பனிஸ் விரைவுச் சாலையுடன் இணைக்கும் இரு சாலைகளும் நேற்று பிற்பகலில் போக்குவரத் துக்கு மூடப்பட்டன. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையின் பொங்கோல் சாலை நுழைவில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி, செங்காங்கிலிருந்து தெம்பனீஸ் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பாதையை அடைத்தது.
சம்பவம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று மாலை 3.13க்கு டுவீட் செய்தது. விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி யில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தனக்கு பிற்பகல் 2.40க்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உடனே தெம்பனிஸ் விரைவுச் சாலையின் பொங்கோல் சாலை நுழைவுப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை.
தலைகுப்புற கவிழ்ந்து சாலையின் குறுக்கே கிடக்கும் லாரி. அதனால் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. படம்: லெவின் ஃபூ.

