தனிநபர் நடமாட்ட சாதனங்களை சாலையில் ஓட்டினால் கடும் நடவடிக்கை

தனிநபர் நடமாட்ட சாதனங்களை சாலையில் ஓட்டினால் கடும் நடவடிக்கை

1 mins read
5c9a3fd2-97b5-4098-be12-9541321826e2
-

தனிநபர் நடமாட்ட சாதனங்களைச் சாலையில் ஓட்டுவோருக்கு $2,000 வரை அபராதமும் அல்லது மூன்று மாதம் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். அத்துடன், அந்தச் சாதனங்களும் பறி முதல் செய்யப்படும். இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. தனிநபர் நடமாட்டச் சாதனக் குற் றங்கள் அதிகரித்து வருவதையடுத்து தவறிழைப்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுவதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, சாலைகளில் தனிநபர் நட மாட்டச் சாதனங்களை ஓட்டி முதல்முறை பிடிபடுவோருக்கு, அது உட்புறச் சாலை எனில் 300 வெள்ளியும் பிரதான சாலை எனில் 500 வெள்ளியும் அபராதம் விதிக் கப்படும். விரைவுச்சாலையில் அந்த நடமாட்டச் சாதனங்களை ஓட்டுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், $2,000 வரை அபராதத்தையும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையையும் அவர்கள் எதிர்நோக்கலாம். திரும்பவும் அதே குற்றத்தில் ஈடுபட் டால் $5,000 வரை அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இப்போது, தனிநபர் நடமாட்ட சாதனங் களை ஓட்டி முதல்முறை பிடிபட்டால், அது எந்தச் சாலையாக இருந்தாலும், $100 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம் முறை குற்றமிழைப்போரிடம் $200ம் அதன் பின்னும் அதே குற்றத்தைத் தொடர்வோரிடம் $500ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. மின்ஸ்கூட்டர் போன்ற தனிநபர் நட மாட்ட சாதனங்களை நடைபாதைகளிலும் பூங்கா இணைப்புப் பாதைகளிலுமே ஓட்ட வேண்டும். ஆயினும், அவற்றைச் சாலை யில் ஓட்டி பிடிபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.