வியட்னாமிய பொது பாதுகாப்பு அமைச்சால் தேடப்பட்டு வரும் அதன் சொத்து மேம்பாட்டாளர் திரு பான் வான் வு கடந்த மாதம் 28ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்ல முயன்ற போது துவாஸ் சோதனைச் சாவ டியில் தடுத்து வைக்கப்பட்டார். திரு பான், திரும்ப வியட் னாமுக்கு அனுப்பப்பட்டால், அங்கு அவருக்கு மரண தண் டனை விதிக்கப்படலாம் என்று அவரது குடும்பம் அஞ்சுவதாக திரு பானுக்காக வாதிட அவரது குடும்பத்தால் அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ரெமி சூ தெரிவித் தார்.
சிங்கப்பூருக்கும் வியட்னாமுக் கும் இடையே கைதி பரிமாற்ற உடன்பாடு எதுவும் இல்லை என் றாலும், வியட்னாமின் குடிநுழை வுத் துறைக்கு ஒரு நாட்டிலிருந்து தனக்குத் தேவைப்படுபவர்களை மீண்டும் திரும்பப் பெற வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது. லஞ்ச ஊழல் தவிர, திரு பான் வியட்னாமின் நாட்டு ரகசியங் களை மற்றவர்களிடம் வெளிப் படுத்தினார் என்று அந்நாட்டு போலிஸ் தெரிவித்ததாக, வியட் னாமிய ஊடகங்கள் கூறுகின்றன.
சிங்கப்பூரில் தடுத்து வைக்கப் பட்டுள்ள வியட்னா மியர் பான் வான் வு. படம்: VGP News

