செங்காங்கில் புதிதாகத் திறக்கப் பட்டுள்ள ஃபெர்ன் கிரீன் தொடக் கப் பள்ளியில் நேற்றுக் காலை முதல் முறையாக தேசிய கீதம் ஒலித்தது. தொடக்கநிலை முத லாம் வகுப்பில் சேர்த்துக் கொள் ளப்பட்ட முதல் 240 மாணவர்கள் புதிய கல்வி ஆண்டைத் தொடங்கி னார்கள். இவ்வாண்டு நாடெங்கிலும் தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள 38,000 மாணவர்களில் இவர்கள் அடங்குவர். புதிய பள்ளியில், வெள்ளை, பச்சை நிற உடற்பயிற்சி சீருடை அணிந்திருந்த 240 மாணவர்களும் எட்டு வகுப்பறைகளில் தங்களது சக மாணவர்களின் அறிமுகத்தைப் பெற்றனர். முதல் வாரத்தில் பாடங்கள் இருக்காது என்றும் மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்க் கவும், வகுப்பறை விதிமுறைகளை வகுக்கவும், பள்ளிச் சூழலுக்குப் பழகிக்கொள்ளவும் பற்பல நடவடிக் கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருப்பதாகப் பள்ளி முதல்வர் மே டாங் தெரிவித்தார். நேற்றுக் காலை, மாணவர்கள் இடைவேளை நேரத்தில் உணவ ருந்த சென்றபோது பெற்றோர் களும் உடன் சென்றனர். வழக்க மான அரை மணி நேரத்திற்குப் பதிலாக ஒரு மணிநேர இடை வேளை நேரம் ஒதுக்கப்பட்டிருந் தது.
வகுப்பாசிரியர் திருவாட்டி லில்லி இயூ (கறுப்பு ஆடை), இணை வகுப்பாசிரியர் திருவாட்டி எமிலி ஆவ் (நீல நிற ஆடை) இருவரும் ஃபெர்ன் கிரீன் தொடக்கப் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

