சிங்கப்பூர் பொருளியல் 2017ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங் களில் 3.1% வளர்ச்சி அடைந்தது. உற்பத்தித் துறையின் வலுவான வளர்ச்சி இதற்கு மீண்டும் துணைபுரிந்தது. கடைசி மூன்று மாதங்களின் வளர்ச்சி பொருளியல் ஆய்வா ளர்கள் எதிர்பார்த்த 2.6 விழுக் காட்டைவிட அதிகமாக இருந் தாலும், முந்திய காலாண்டின் 5.4 விழுக்காட்டைவிடக் குறைவு என வர்த்தகத் தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புகள் காட்டுகின்றன.
சிங்கப்பூர் பொருளியல் 2017ஆம் ஆண்டு முழுவதற்கும் 3.5% வளர்ச்சி அடைந்ததாக பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக் கிழமை தமது புத்தாண்டு செய்தி யில் அறிவித்ததைத் தொடர்ந்து முன்னோட்டக் கணிப்புகள் வெளி யிடப்பட்டுள்ளன. சென்ற ஆண் டின் வளர்ச்சி, முன்னோட்டக் கணிப்புகளைவிட இது இருமடங் குக்கு மேல் அதிகம். உலகளாவிய வளர்ச்சி அதி கரிப்பு இதற்குக் காரணம் என்றும் திரு லீ கூறினார்.

