மேசைப்பந்து விளையாட்டாளர் தாயாரின் குற்றம் நிரூபணம்

மேசைப்பந்து விளையாட்டாளர் தாயாரின் குற்றம் நிரூபணம்

1 mins read

முன்னாள் தேசிய மேசைப்பந்து ஆட்டக்காரரான லிஹுவின் தாயார் சு ஃபெங்சியான் அதிகாரி ஒரு வருக்கு லஞ்சம் கொடுத்தது நிரூ பிக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு எதிரான ஒழுங்குமுறை விசாரணையின் போது கடுமையாக நடந்துகொள்வ தைத் தவிர்க்கும் பொருட்டு, சிங்கப்பூர் மேசைப்பந்துச் சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குநர் லோய் சூ ஹானுக்கு 2016ஆம் ஆண்டு அக் டோபரில் 54 வயது திருவாட்டி சு 2,000 யூரோஸ் (S$3,024) கொடுத் தார். அந்தத் தொகை ஊழல் புரியும் நோக்கத்தில்தான் கொடுக்கப்பட் டது என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இம்மாதம் 30ஆம் தேதி வழக் கின் தீர்ப்பு விவாதங்களும் தண்ட னையைக் குறைப்பது தொடர்பான வாதங்களும் இடம்பெறும்.