மீண்டும் குற்றவாளியாகும் இளையரை திருத்த திட்டம்

மீண்டும் குற்றவாளியாகும் இளையரை திருத்த திட்டம்

1 mins read

சட்டப் பிரச்சினையில் சிக்கும் இளையோரின் விகிதாச்சாரம் குறைவாக இருப்பினும் அதன் அளவு ஆக அதிகமாக உள்ளது என்று சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து உள்ளார். இப்பிரச்சினையைக் கவனிக்க அமைச்சர்நிலைக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அக்குழு பிரச்சினையில் சிக்கும் இளை யோரைச் சீர்திருத்துவதற்கான பெருத்த ஆதரவை நல்கும் என் றும் அவர் கூறினார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு, உள் துறை அமைச்சு ஆகியன அக் குழுவில் இடம்பெறும் என்றார் அவர். "குற்றச்செயலில் ஈடுபடும் போது ஒவ்வோர் இளையரும் தனக்குக் கிடைத்திருக்கும் நல் வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது. இது வெறும் எண் ணிக்கை மட்டுமல்ல, வாழ்க்கை யும்கூட. "மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோர் விகிதம் குறைந்து வரு வது நல்லதுதான்.

இருப்பினும் நாம் சும்மா இருந்துவிடலாகாது," என்று சமூக நிகழ்வு ஒன்றுக்குப் பிறகு அமைச்சர் லீ செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இதன் தொடர்பில் தமது அமைச்சு பெரிய திட்டங்களை வகுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2011ஆம் ஆண்டில் மறுவாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்தோரில் 16.7 விழுக்காட்டினர் அடுத்த மூன்றாண்டுகளில் மீண் டும் குற்றச்செயல் புரிந்ததாக தமது அமைச்சு கண்டறிந்ததாக திரு லீ கூறினார்.