'புளூஎஸ்ஜி' மின்சாரக் கார் பகிர்வுத் திட்டம் தொடங்கப்பட்ட மூன்று வாரங்களில் 3,300 பேருக்கு மேல் பதிவு செய்ததுடன் 5,000க்கும் மேலான கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 80 வாகனங்களும் 32 மின்னேற்ற நிலையங்களும் சென்ற மாதம் 12ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. எதிர்பார்ப்புக்கு மேலாக கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கம் அளிப்பதாகவும் பெருமிதத்தைத் தருவதாகவும் 'புளூஎஸ்ஜி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃப்ரான்க் விட்டெ கூறியுள்ளார். சிங்கப்பூர்வாசிகள் கேட்டுக் கொண்டதையடுத்து இன்னும் அதிக எண்ணிக்கையில் மின் னேற்ற நிலையங்களைத் துரிதமாக அமைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
3 வாரங்களில் 5,000 மின்சார கார் பகிர்வு
1 mins read

