சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள்

1 mins read

சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்திற்கு நான்கு புதிய அனைத்துலக நீதிபதிகள் மூன்று ஆண்டுகள் தவணைக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அவர்களின் தவணைக் காலம் நாளை தொடங்க உள்ளது. திங்கட்கிழமை இஸ்தானாவில் அவர்களின் பதவியேற்பு நடைபெறும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ராபர்ட் ஷென்டன் ஃப்ரெஞ்ச், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் எட்மண்ட் நியூபர்ஜர், ஜெரமி லயனல் குக், கனடாவைச் சேர்ந்த பெவர்லி மரியன் மெக்லச்லின் ஆகியோர் அந்த நால்வர். அவர்களில் இருவர் தங்களது நாட்டின் தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

அனைத்துலக வணிக சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் சிங்கப்பூரின் சட்டத் துறையை வளர்ப்பதற்காகவும் 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்நீதிமன்றத்தில் இந்த நால்வரைச் சேர்த்து மொத்தம் 15 அனைத்துலக நீதிபதிகள் பொறுப்பு வகிப்பார்கள்.