பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த இரு மானியங்கள்

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த இரு மானியங்கள்

1 mins read

நிலப்போக்குவரத்து முறையை மேம்படுத்த ஆய்வாளர்கள், மேம் பாட் டாளர்களுக்கு நிலப்போக்கு வரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சிங்கப்பூரின் தற்போதைய போக்குவரத்து சவால்களை எதிர் கொள்ள, புத்தாக்க, நடைமு றைக்குச் சாத்தியமான தீர்வு களைக் கண்ட றிவதற்கான இரு ஆய்வு மானியங்களை ஆணையம் நேற்று அறிவித்தது. போக்குவரத்து நேரத்தைக் குறைப்பது; பொதுப் போக்குவ ரத்து சேவையைச் சிறந்த முறை யில் மேம்படுத்துவது; சாலைகளுக் கான நிலப்பகுதிகளைக் குறைப் பது, மீட்பது; நில அகழ்வு கணிப் பின் துல்லியத்தை மேம்படுத்துவது ஆகிய நான்கு துறைகளில் ஆய்வில் ஈடுபடுவோர் கவனம் செலுத்துவார்கள்.

முதல் கட்டமாக ஆய்வாளர்கள் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, பேருந்தில் ஏற, இறங்க எடுக்கும் நேரத்தைக் குறைக்கும் மேம் படுத் தப் பட்ட பயண அட்டை முறை அல்லது பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்க ஏதுவாக சாலைக் குறியீடுகள் அமைப்பது போன்ற புதிய தீர்வுகளைப் பரிந் துரைக்கவும் சீரான பயணத் துக்கான இடையூறு களை அடை யாளம் காணவும் அழைக்கப் படுவார்கள். இரண்டாவது பகுதியில் ஆய் வா ளர்கள், பொதுப் போக்கு வரத் தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறிப்பாக உச்ச நேரத்தில், தற்போதுள்ள வளங்களைப் பயன் படுத்தி அல்லது குறைத்து, பொதுப் போக்குவரத்து கட்டுப் படியாகக்கூடியதாகவும் விரும்பத்த க்கதாகவும் இருப்பதை உறுதி செய்ய புதிய வழிகளை உருவா க் குவது பற்றி ஆராய்வார்கள்.