வியட்னாம் தொழிலதிபரை நாடு கடத்த உத்தரவு

வியட்னாம் தொழிலதிபரை நாடு கடத்த உத்தரவு

1 mins read

குடிநுழைவு குற்றச்செயல்களுக்காக சென்ற வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட வியட்னாம் சொத்துத்துறை தொழிலதிபர் பான் வான் அன் வூ, தன்னுடைய பெயர் இல்லாத வியட்னாம் பாஸ்போர்ட் ஒன்றைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்து இருக்கிறார். இது பற்றி வியட்னாமிய அரசாங்கம் சிங்கப்பூரிடம் தெரிவித்திருந்தது என்றும் இது ஜனவரி 4ஆம் தேதியிடப் பட்ட குடிநுழைவு, சுங்கத்துறை ஆணையத்தின் கடிதம் ஒன்றின் மூலம் தெரியவந்தது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வியட்னாமில் மூத்த வேவுத் துறை அதிகாரியாக முன்பு பதவி வகித்த வூ, 42, அரசாங்க ரகசியங்களை வேண்டு மென்றே வெளியிட்டதாகக் கூறப்படுவதையொட்டி தேடப்பட்டு வருகிறார். குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல குற்றச்செயல்களைச் செய்ததற்காக வூ கடுமையாக எச்சரிக்கப்பட்டார் என்றும் அவரைத் தடுத்து வைக்கவும் நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்றும் டிசம்பர் 30ஆம் தேதியிடப்பட்ட குடிநுழைவு, சுங் கத்துறை ஆணையத்தின் கடிதம் குறிப்பிட்டது.