போலிஸ்காரரை தள்ளிவிட்ட ஆஸ்திரேலிய வியாபாரிக்கு அபராதம்

போலிஸ்காரரை தள்ளிவிட்ட ஆஸ்திரேலிய வியாபாரிக்கு அபராதம்

1 mins read

சிங்கப்பூரில் 2006ஆம் ஆண்டு அல்ட்ரா இசைவிழா என்ற நிகழ்ச்சி நடந்தபோது ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டி ருந்த ஒரு போலிஸ் அதிகாரியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் பிடித்துத் தள்ளினார். தான் ஒரு போலிஸ் அதிகாரி என்றும் தன் பணிக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் என்றும் சார்ஜண்ட் அலெக்ஸ் ஸாங் ஸெங்யாங், 28, என்ற அந்த போலிஸ் அதிகாரி கூறியபோது, அவரிடமிருந்து அடையாள அட்டையை லியாங் வெய்ன், 39, என்ற அந்த ஆஸ்திரே லியர் கேட்டார். அட்டையை போலிஸ் அதிகாரி காட்டியதும் அதைப் பார்த்துவிட்டு பிறகு அந்த அதிகாரியின் இடது பாதத்தை அவர் மிதித்தார். குற்றத்தை ஒப்புக்கொண்ட லியாங்குக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.