ஆசிய பசிபிக்கில் தலைசிறந்த மத்திய வங்கி ஆளுநர் மேனன்

ஆசிய பசிபிக்கில் தலைசிறந்த மத்திய வங்கி ஆளுநர் மேனன்

1 mins read
b0c843dc-3ac5-44ca-a928-f784122e1ab7
-

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், ஆசிய பசிபிக்கில் 2018ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த மத்திய வங்கி ஆளுநர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார். பிரிட்டனை தளமாகக்கொண்டு செயல்படும் 'தி பேங்கர்' என்ற சஞ்சிகை திரு மேனனை இவ் வாறு குறிப்பிட்டு இருக்கிறது. ஃபைனான்‌ஷியல் டைம்ஸ் குழுமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்தச் சஞ்சிகை, ஆண்டுதோறும் தலைசிறந்த வங்கியாளர்களுக்கு இத்தகைய விருதை வழங்கிச் சிறப்பிக்கிறது. வங்கித் துறையினர், பொருளி யல் வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்த சஞ்சிகை ஓர் ஆய்வை நடத்தி அதன் அடிப் படையில் தலைசிறந்த வங்கியா ளரை அது தேர்ந்தெடுக்கிறது. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இந்த விருதை 2011ல் பெற்றார். அப்போது அவர் இந்த ஆணையத்தின் நிர்வாக இயக்கு நராக இருந்தார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன். படம்: புளூம்பர்க்