வீட்டுக்கு வலிய வந்து பொருள் விற்போர்: பயனீட்டாளருக்கு சங்கம் எச்சரிக்கை

1 mins read

வீட்டுக்கு வீடு வந்து பொருட்களை வலிய விற்பனை செய்வோரை வீட்டுக்குள் அனுமதித்து அவர் களிடம் பொருள் அல்லது சேவை வாங்கும் பயனீட்டாளர்களுக்குச் சட்டப்படி பாதுகாப்பு கிடைக்காமல் போகக்கூடும் என்று 'கேஸ்' எனப் படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங் கம் எச்சரித்து இருக்கிறது. இப்படி வீட்டுக்குள் வர அனுமதி பெற்றுவிடும் நிறுவன விற்பனையாளர்கள் அதைப் பயன் படுத்தி தங்கள் தயாரிப்புப் பொருட் களை, சேவைகளை மேம்படுத்துவ தாக சங்கம் தெரிவித்துள்ளது. கேஸ் அமைப்பிற்கு கடந்த மூன்றாண்டுகளில் வந்த, வீட் டுக்கு வீடு விற்பனை தொடர்பான 117 புகார்களில் சுமார் 30% புகார் கள், நிறுவன விற்பனையாளர்க ளைத் தங்கள் வீட்டுக்குள் அனு மதித்த பயனீட்டாளர்கள் தெரிவித் தவை என்பது சங்கத்தின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிகின்றன.

பயனீட்டாளர்கள், நிறுவனங் களின் விற்பனையாளர்களைக் கடைத் தொகுதிகளிலும் சாலைக் காட்சிகளிலும் வர்த்தகச் சந்தை களிலும் பார்க்கும்போது அன்ப ளிப்பு தருவதாகக் கூறும் அவர்க ளின் பேச்சுகளை நம்பி அவர் களைத் தங்கள் வீட்டுக்கு வரும் படி கேட்டுக்கொள்கிறார்கள். அப்படி வீட்டுக்கு வரும் விற் பனையாளர்கள் தங்கள் பொருட் களையும் சேவைகளையும் வீட்டில் இருப்பவர்களிடம் எடுத்துக்கூறி விளம்பரப்படுத்துகிறார்கள் என்று 'கேஸ்' தெரிவித்து இருக்கிறது.