அமைச்சர்கள்: 4வது பிரதமர் பற்றி தக்க நேரத்தில் முடிவு

1 mins read
1ec5e0e6-3283-4271-947c-7cc9b24dbca4
-

சிங்கப்பூரின் நான்காவது பிரதமர் யார் என்பதை தக்க தருணத்தில் தாங்கள் முடிவு செய்யப்போவதாக நான்காம் தலைமுறை தலைவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதேவேளையில், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், அடுத்த பிரதமர் யார் என்பதை தான் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். சிங்கப்பூரின் நான்காம் தலை முறைப் பிரதமராக ஆகும் தகுதி யுடன் இப்போதைய அமைச்சரவை யில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், 56, பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், 48, கல்வி அமைச்சர் ஓங் யி காங், 48, ஆகியோர் அந்த மூவர். திரு ஓங், இந்த வார தொடக் கத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஒரு பேட்டி அளித்தார்.

இடமிருந்து நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிரதமர் அலுவலகம்